வாழ்க்கையில் முன்னேற தனக்குச் சரியான வாய்ப்புக் கிடைக்க வில்லை , முன்னேற விடாமல் தன்னைப் பிறர் தடுத்து விட்டார்கள் என்று சிலர் புலம்புவது உண்டு. ஆனால் எந்த ஒரு கெட்டிக்காரனையும் திறமைசாலியையும் மேலே வர விடாமல் அமுக்கிப் பிடிக்க யாராலும் முடியாது. மன உறுதி மட்டும் இருந்தால் மற்றவர்கள் குப்புறத் தள்ளினாலும் மேலே வந்து யாராலும் சாதிக்க முடியும். ' தீதும் நன்றும் பிறர்தர வாரா ' நமது வேதனைக்கும் சாதனைக்கும் அடுத்தவர்களைக் குறை சொல்லுதல் சரியல்ல.வீரியம் கொண்ட விதைதான் விருட்சமாக மாறி மண்ணுக்கு வெளியே வரும். நம்மைப் பலவீனப்படுத்தும் நம்பிக்கையற்ற சொற்களை நமது எண்ணத்தில் புக அனுமதிகக் கூடாது. முன்னேற்றம் அடைவதற்கான சுய உந்துதலை செழிப்பாக வளர்க்க வேண்டும். தடைக் கற்களைப் படிக்கற்களாக்கும் ரசவாதத்தை தெரிந்து கொண்டால் அதுவே நமது வெற்றிக்கான அடிபடை ஆதாரமாகும். உங்கள் வாழ்வும் தாழ்வும் உங்கள் கையில் ,உங்கள் கையில் மட்டும்தான் உள்ளது. வீறுகொண்டு எழு ! பேறு பெற்று வாழு ! !
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment