- திரு.குழந்தைவேல் எழுதும் தொடர்
- இரண்டாம் பகுதி
என் தகப்பனார் ராமசாமி செட்டியாரும் கொஞ்சகாலம் வியாபாரம் இல்லாமல் ஊரிலேயே இருந்து வந்தார். அதுசமயம் அப்புச்சி அவர்கள், KS மாமா கருக்கம்பாளையத்திலிருந்து பக்கத்து கிராமத்திற்கு கணக்கு எழுதப் போவதாயும், மிகவும் சிரம்ப்படுவதாகவும் சொல்லி, நம் தகப்பனாரையே வியாபாரம் செய்து தரவும் என்று கேட்டுக்கொண்டார். கோவையில் முன்சிபாலிட்டி கடை ஒன்றை பெரியகடை வீதியில, தகப்பானாருக்குத் தெரிந்த கறுப்புசாமி செட்டியார் அவர்களிடம் சொல்லி, வாடகை அட்வான்ஸ கொடுத்து, தினம் ஒன்றுக்கு 1-2-0 வீதம் பேசி முடிவு செய்து கொடுத்தார் காடான் வழி விடுது, நல்ல சகுனம் மேற்படியார் கடையையும் சீக்கிரம் எடுத்துக் கொள்ளவும் என்று சொல்லி போனார்.
- கடையும், கோவை முனிசிபாலிட்டி கடை Big bazaar St K.Swaminathan Chettiar& Bros என்ற விலாஸம் வைத்து 1930 ஆம் வருடம் மாசிமாதம் தொடங்கினார் KS-ம் ஊரிலிருந்து கோவை வந்துவிட்டார். தகப்பனாரும் முன் கூட்டியே மதுரை PSN முருகநாதன் செட்டியார் கடையில் manager -ஆக இருந்த பழக்கத்திலும் கடை கோவையில் ஆரம்பித்தார்
- எனக்கும்,தம்பிக்கும் படிப்புக்காகவும், தொழில் விருத்திக்காகவும், கோவை 1932-ஆம் வருடம் வந்து குடியிருந்தோம். கோவையில் ஊரிலிருந்து வந்த்தும்,மேற்கொண்டு கடையைப் பார்த்துகொள்வதற்கு, ஆள் வேண்டியிருந்த்தால்,கிட்டுமாமனும் 1934\1935 -ல் வந்தார் அப்பொழுது வீடு முதலில் தர்மராஜா கோயில் பக்கம் இருந்த்து. அங்கு நடுவில் கிணறு, லைட் இல்லை, ஆனால் தண்ணீர் வந்த்து. பின்னர் சாணார்ர வீதிக்கு மாற்றி வாடகை ரூபாய பத்து என்று 3 குடித்தனம் இருந்துவந்தோம். கிட்டுமாமனுக்கு கல்யாணம் 35-ல் ஆகி எல்லோரும் சாணார் வீதியில் குடியிருந்தோம். அப்பொழுது இந்த வீட்டில் 3 குடித்தனம் இருக்க வசதியாக இருந்த்து.இந்த வீடு Palakadu ஐயருக்கு தெரிந்தவராய் இருந்த்தால் ரூபாய் ஆயிரத்திற்கு தருகிறேன் என்று சொன்னார். ஆனால் அதை வாங்கவில்லை. பணவசதி இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
No comments:
Post a Comment