Thursday, June 11, 2009

அப்பா எனும் அஸ்திவாரம்

இன்று என் தந்தையாரின் 103 வது பிறந்த நாள். என் நெஞ்சில் முட்டி மோதிய எண்ணங்களை கவிதையாக்கியிருக்கிறேன்
  • அபபா......என் முதல் கதாநாயகன்என் முதல் தோழன்தடுமாறும் போது தோள் குடுத்துதடம் மாறும் போது தட்டி கேட்கும்என் தோழமை நீங்கள்

  • சமூகத்து சொல்லம்புகள்எனை காயப்படுத்தும்போதுஎன்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்சுயசிந்தனை சுயமரியாதை எனஎன் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனைஎழுப்ப நீளும் முதல் கரம்தங்களுடையது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!! வாழ்கையின் எனை நோக்கிவரும்எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்என தைரியத்தில்........

மெத்தையில் நான் உறங்கியதை விடஉங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லைஇறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

No comments: