' திரும்பிப் பார்க்கறேன்' - தொடரை 'அம்போ' - ன்னு விட்டுவிட்டீர்களே ! என கோவையிலிருந்து பலத்த குரல் ஒலிக்கிறது. இதோ............ஐந்தாம் பகுதி தொடர்கிறது..
KS {சேதுராமன்} கிட்டு மாமன், மதறாஸில் கடை வைக்கலாம் என்று சொன்னதன் பேரில், குன்னத்தூர் VAV யிடமிருந்த கடைக்கு advance உம், வெண்ணை டின்னையும், பெற்றுக் கொண்டு நானும் கிட்டு மாமனும்
மதறாஸ் வந்து சேர்ந்தோம்
நாங்கள் எடுத்திருந்த 55\56, usman road ல் toilet கிடையாது. மலஜலம் கழிக்க தற்சமயம் usman road end லுள்ள இடத்திற்கு போய் வரவேண்டும். கிணற்று ஜலத்தில் குளித்து வியாபாரத்திற்கு ரெடியாக வேண்டும். நான் குளித்து வருவதற்கு முன் கிட்டு மாமன் 2 இட்டிலியும் 1 வடையும் வாங்கிரெடி
யாக வைத்திருப்பார்.
அதை சாப்பிட்டுவிட்டு 3வீசை வெண்ணையை 12 பாக்கெட்டுகளாக எடுத்துக்கொண்டு,வீடு வீடாக canvas செய்து விற்று பணம் கொண்டு வரவேண்டும். இதை எப்படியாவது காலை 12 மணிக்குள் விற்று விடுவேன். 1 மணிக்கு கடைக்கு வந்து, அதேபடி பொட்டலம் 3 வீசை
எடுத்துக்கொண்டு விற்பனைக்கு போகவேண்டும். நடந்துதான் செல்லவேண்டும். வீட்டிற்கு 6 அல்லது 7
மணிக்கு திரும்பி வந்து சேருவேன். நானும் கிட்டு மாமனும் வாரவாரம் மாம்பலம், நுங்கம்பாக்கம் முதலிய இடங்களிற்கு ஒவ்வொரு வீடாக, ஏறி வியாபாரம் செய்து வந்தோம். 8, 9 - மாதம் இப்படி வியாபாரம் செய்த்தில் ரூ. 1000 தான் எங்களுக்கு மீதியானது. இருவரும் தீபாவளிக்கு ஊருக்கு
புறப்பட்டுச் சென்றோம்.
நாங்கள் இருவரும் usman road ல் இருந்த போது Indu Commercial Bank ல் வேலை செய்யும் இரண்டு மாயவரம் அய்யர்களும், எங்களுக்கு சின்ன சின்ன ஒத்தாசைகள் செய்துவந்தார்கள் இந்த சமயத்தில் நெல்லூரிலிருந்து V. முருகேசனும், வந்து நம்இடத்தில்தான் தங்குவார். நாங்கள்
படும் சிரமத்தைப் பார்த்துவிட்டு, என்னை நெல்லூர் அழைத்து சென்றுவிட்டார்.
அங்கு retail கடை இருந்தாலும், எல்லாம் control ஆனதால் பயந்து, பயந்து வியாபாரம் செய்யவேண்டியதாகயிருந்த்து. town ல் control -ற்கு மேல் விற்க முடியாத்தால் பக்கத்திலுள்ள சின்ன கிராமங்களுக்கு, வண்டியில் சரக்கு கொண்டுபோய் விற்பனை செய்துவந்தோம். அது தவிர jeevanlal உம் பித்தளை
சரக்குகள் 1000 அல்லது 2000- ற்கு மாதமாதம் சப்ளை செய்வார்கள். அதில் நல்ல லாபம் வரும் தவிர, முருகேசனும், காந்திமதியும் சொந்த தம்பிபோல் என்னை பாவித்து நடத்திவந்தார்கள். மதறாஸிலிருந்து கிட்டு மாமனும், வெண்ணைக்கடையை நிறுத்திவிட்டு கோவை போய்ச்சேர்ந்தார். என்னை கொச்சி போகச்சொல்லி வற்புறுத்திவந்தார்.
1945 -ஆம் வருடம் யாராரிடம் பட்டரை இருந்த்தோ, அவர்களுக்கு icc தகடு quota VMP& Sons மூலம் சப்ளை செய்து வந்தார்கள். நாங்களும் {VMMGV} பட்டரை allotment செய்ய சொல்லி எழுதி, 1 டன் quota VMP& Sons வழியாக வந்த்து. quota தகடு வந்து விட்டதால், என்னை நெல்லூரிலேயே இருக்கும்படி வற்பறுத்தி வந்தார். ஆனால் கிட்டு மாமன் கொச்சியிலேயே இருக்க வேண்டும் என்றதனால் கொச்சிக்கு 1945 ல் சென்றேன்.
No comments:
Post a Comment