R.குழந்தைவேலு எழுதும்
ஆறாம் பகுதி
- கொச்சியிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக கருதி நடத்தி வந்தார்கள். ஒரு வருஷத்திலேயே வேலைகள் கற்றுக் கொண்டேன். தவிர S.A அவர்களும் நன்கு அன்புடனும் பண்புடனும், பழகி யாதொரு வித்யாசமும் இல்லாமல் நடத்தி வந்தார்கள். management செய்யும் அளவிற்கு பழகிகொண்டேன். அப்போது control இருந்த்தால், control rate ற்கு மேல் விற்க கூடாது. Imported sheets,Bay goods முதலியன regular ஆக வரும். நல்ல rate ல் விற்று வந்தோம்.
- நெல்லூரில் இருந்த சமயம், RM ஐயும் Loyola ல் BA ல் சேர்த்தினோம். நெல்லூரில் இருந்த சமயத்தில், அடிக்கடி Loyola போய் பார்த்து வருவேன். நெல்லூரிலிருந்து நான் வந்த பிறகு, அங்கு சரியான வியாபாரம் இல்லாத்தாலும், control time ஆக இருந்த்தாலும், லாபம் பார்க்கமுடியவில்லை. எந்த சரக்கு ஆக இருந்தாலும் அதை control rate ல் விற்கவேண்டும். அதனால் கையிலுள்ள சரக்கை விற்பதற்கு, பக்கத்து கிராமங்களுக்கு கொண்டு சென்று நம் ஊர் சந்தையில் விற்பதுபோல விற்று வந்தோம். இதற்கு சமையல்ஆள், துணைக்கு, பந்தோபஸ்திற்கு ஆட்கள் ஆக 4*5 பேர் தேவைப்படும். இரண்டு கடைக்கார்ர்கள் ஒன்று சேர்ந்து போய்வருவோம்.
- அப்போது loyola college pricipal நாங்கள் கோவையை சேர்ந்திருப்பதால் கோவையில் சேரும்படி advise செய்தார். நான் அதற்கு இடம் கொடுக்காமல், எங்களுக்கு என்னைத்தவிர வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றும், எப்படியும் loyola வில் தான் வேண்டும் என்று Fr James D"sousa விடம் கெஞ்சி, கடைசியில், economics கொடுத்தார். MA Hrs முடித்து graduate ஆனான்.
No comments:
Post a Comment