ஆஹா ! இப்படி ஒரு சலசலப்பை நம்மவர்கள் அணி ஏற்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.தொலைபேசியில் பேசும் சகோதரிகளும் , மற்ற விசேஷங்களில் சந்திக்கும் உறவுகளும் , இதன் நோக்கம் என்ன? என்ன செய்ய போகிறீர்கள் ? என்று கேட்கிறார்கள் . அதற்கான பதில் . சென்ற தலைமுறையில் , நம்மில் பலர் , எத்தனையோ தூரம் தூரமாக வசிக்க நேர்ந்தாலும் கூட , பேச்சிலும் உணார்விலும் , பின்னிப்பிணைந்து கிடந்த விசாரிப்புக்கள் இருந்தன. தற்போது நாம் பார்ப்பது என்ன? கல்யாணம் போன்ற விசெஷங்களில் கூடினாலும் " நலமா ? " என்று பேருக்குகூட விசாரிக்க நேரமில்லாமல் போய்விட்டது. நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீர்கள் ? அதை மீட்ப்பத்ற்க்கான முயற்ச்சியே இது . அதற்காக என்ன செய்யலாம் ? 1. நமக்குள் பிறந்த நாள் வாழ்த்துக்களை பரிமாறிகொள்ளலாம். 2. சிற்றூலா செல்லலாம் . 3. get together , யாராவது ஒருவர் வீட்டில் ஏற்பாடு செய்து , உணவுகளை பகிர்ந்துக்கொள்ளலாம். இன்னும் என்ன செய்யலாம் ? நீங்களும் பதிவு செய்யுங்களேன் ....
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல முயற்சி. சென்னை, மும்பை போன்ற சில நகரங்களில் கூட்டங்கள்/சிற்றுலா 'நம்மவர்கள்'-இடையே ஆரம்பித்துள்ளன. அவை மேலும் தொடர்ந்து நடை பெற விழைகிறேன். இப்பதிவு ஊக்கியாக (Catalyst) செயல் படட்டும் !
Post a Comment