இன்று அரங்கத்தில் தமிழ் விழா! இராப்பத்து விழா! திருவாய்மொழித் திருநாள்! பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்திலே வைகுந்த ஏகாதசிப் பெருவிழா! மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் இதைச் சொல்லுவார்கள்! மேலும் கீதையின் பிறந்த நாளும் கூட!
மூலவர் அரங்கனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!* நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன் என்னும் நம் ஆழ்வார்!* அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் குட்டி போல், நாமும் நுழையலாம், வாங்க!அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! சொர்க்க வாசல் என்பது பேச்சு வழக்கு! உண்மையில் அது வைகுந்த வாசல், பரமபத வாசல் தான்!விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!நடை அழகு! உடை அழகு!திருக் குடை அழகு! சக்கரப் படை அழகு!கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!
No comments:
Post a Comment