நான்காம் பகுதி
R.குழந்தைவேலு தொடர்கிறார்
1944 ற்கு மேல் தகடு விலைகள், லேபர் எல்லாம் கூடிவிட்டதால், விலை ஏறியது. அதனால் வியாபாரம் குறைந்து விட்டது.
1938-39 வரை Veerasamy School ல் படித்துவிட்டு பின், RS Puram Middle School ல் 6 வதும், 8 வதுமாக சேர்ந்து படித்து வந்தோம். 1939\/40 3 form Exam எழுதிய பின் வேலம்பாளையம் வந்து சேர்ந்தோம்.
3\1\1940 ல் தகப்பனார் காலமாகிவிட்டார். 1944 ஆம் வருஷம் SSLC திருப்பூரில் எழுதி பாஸ் ஆகவில்லை. எங்களுக்கு வீட்டுச்செலவிற்கு கோவையிலிருந்து மாதம் 10,15,20,25 என்று அனுப்பிவந்தார்கள்.சிலவிற்கு பத்தாது.வேறு ஒன்றும் செய்ய முடியாது. 1940 முதல் 1944 வரை பெரும் சிரமங்களை மேற்கொண்டு படிப்பை முடித்தேன். தம்பியும் SSLC முடித்து Loyola வில் 1945 ல் சேர்ந்தான்
.தகப்பனார் காலமானவுடன், கடை நடத்த வழி தெரியாமல், தாயாரிடமிருந்து 50 பவுன் நகையைப் பெற்றுக் கொண்டு KS, கடையை நடத்திவந்தார். நகை கொடுத்தும், மிகச் சிரமத்தில் கடை நடத்தினதாய் சொன்னார்கள். ஆனால் நல்ல லாபம் வந்து கொண்டிருந்தது. நமக்கு பணம் கொடுக்க ஏதோ சாக்கு போக்கு சொல்வார்கள்.
தினமும் சிரமபட்டு படிக்க இஷ்டமில்லை. ஆதலால் படிப்பை விட்டு, வேலையில் சேர எண்ணினேன். Exam Fees ற்கு சீனு வாத்தியார் பணம் கட்டி வந்தார். ஒவ்வொரு முறையும், செலவிற்கு பணம் வேண்டுமென்று , கோவைக்கு தபால் எழுதியோ, யாரிடமாவது சொல்லியோ, பின்னர் தான் பணம் வந்து சேரும். இப்படியே வருடம் 4 கழிந்து விட்டது.
SSLC எழுதிய பின், கோவை கடையில் இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.அது சமயம் KS (சேதுராமன்) மாமன், இரண்டாவது கலியாணம் செய்து, சவுந்திரம் பிறந்தபின், சவுந்திரம் தாயாரும் காலமாகிவிட்டார். நடுவையும்,சவுந்திரத்தையும், தாயாரிடம் விட்டு விட்டு, KS (சேதுராமன்) பெங்களூர் சென்று விட்டார்.
No comments:
Post a Comment