Friday, January 9, 2009

http://in.youtube.com/watch?v=a76oXDsdjJQ

  • தில்லையில் முதல் நாளே தேரோட்டத்தைக் காண வந்த பகதர்கள் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் வந்து குழும ஆரம்பித்து விடுகின்றனர். மார்கழிப் பனியில் இரவு முழுவதும் அமர்ந்திருக்கும் அந்த பக்தியை எப்படி என்று விவரிப்பது புரியவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான். பிரம்ம முகூர்த்தத்தில்அருணோதய காலத்தில் (அதி காலை சுமார் மூன்று மணி அளவில்) நடராஜப் பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும் தேவர்கள் நடத்தும் உஷத் கால பூஜையின் மஹா அபிஷேகம் துவங்குகின்றது.

ஆருத்ரா தரிசனம் தேவர்கள் பூஜை என்பதால் அதை நடத்தும் தீட்திசர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார், திருவிழாவின் பத்து நாட்களும் அவர் மிகுந்த நியம நிஷ்டையுடன் இருக்கிறார் என்றும் ஆருத்ரா தரிசன அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிட்டியவர் மிகவும் பேறு பெற்றவர் என்பதும் கேட்ட செய்தி.

செய்யப்பதேவர்கள் நடத்தும் அபிஷேகம் என்பதால் அதன் பிரம்மாண்டத்தை தாங்கள் உணரலாம், அண்டா அண்டாவாக அபிஷேகத் திரவியங்கள் ஐயனுக்கும் அம்மைக்கும், மஞ்சள்ப் பொடி, திருமஞ்சனப் பொடி, நதியாய்ப் பாயும் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பழச்சாறுகள்( அனைத்து பழங்களின் சாறு) தேன் பேரீச்சம் பழ மாலையுடன் என்று பல்வித அபிஷேகம். அபிஷேகத்தின் போது ஐயனின் நிஜ ரூபத்தை முழுமையாக தரிசிக்கும் பேறு கிட்டுகின்றது. சில்ப சாஸ்திரப் பிரகாரம் நடராஜ மூர்த்தங்கள் ஷ்ட்கோண சக்கர பிரகாரத்திலோ அல்லது அம்பாளின் ஸ்ரீசக்ர பிரகாரத்திலோ வடிக்கப் படுகின்றன. தில்லை நடராஜர் ஸ்ரீசக்ர வடிவில் அமைந்துள்ளார். அறியாமையாம் முயலகனையும், ஐயனின் பூத கணங்களையும் அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். அம்மைக்கு தோழியராக மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் இருக்கும் கோலதையும் திரிபாங்கியாக ஒயிலாக சாய்ந்து அம்மை ஐயனை நோக்கிய வண்ணம் நிற்கும் திருக்கோலத்தையும் இன்று அருமையாக தரிசனம் செய்யலாம். அடுத்து திருநீறு அபிசேகம் மலை மலையாக அபிஷேகம் ஆகின்றது எம்பெருமான் தன் பவள மேனியில் பூசும் அந்த பால் வெண்ணீறு. திருநீறு அபிஷேகம் நடைபெறும் போது அந்த சுகந்த திருநீற்றின் மணம் அந்த கோவில் முழுவதும் பரவுகின்றது என்றால் எவ்வளவு திருநீறு ஐயனுக்கு அபிஷேகம் ஆகின்றது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள்லாம். நிறைவாக சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகின்றது, தூய அரைத்த சந்தனம் அபிஷேகம் டுகின்றது ஐயனுக்கும் அம்மைக்கும், பின் சகஸ்ரதாராவினால் பன்னீர் அபிஷேகம். அபிஷேகத்திற்க்கு பின் பல் வேறு மலரஞ்சலி சாற்றப்படுகின்றது.

  • இவ்வாண்டின் சிறப்பு நிகழ்வான நவரத்ன சுவர்ணாபிஷேகம் நடைபெறும். அது என்ன நவரத்ன சுவர்ணாபிஷேகம்? ஆலயங்களில் இறைவனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் நவரத்னங்கள்(மாணிக்கம், பவளம், வைரம், முத்து, மரகதம், புஷ்பராகம், நீலமாமணி, கோமேதகம், வைடூரியம்,)பீடத்தின் கீழ்ப் பரப்புதல் மரபு. நாள் தோறும் ஆறுகால பூஜையின் போது பகல் இரண்டாம் காலத்தில் பூஜை ஏற்கும் சிறிய நடராஜர், இரத்தின சபாபதி எனும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: