மேலை நாட்டின் தெய்வமான யேசுபிரான் கூறியது : ' யாரையும் பகைக்காதீர்கள். வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டுங்கள் . வேலைகளை விட்டுவிட்டு பெட்டி படுக்கை கட்டிக்கொண்டு தயாராகுங்கள். விரைவில் உலகம் அழியப்போகிறது. இதோ மீண்டும் நான் வரப்போகிறேன். ' என்றார். நம் கண்ணபிரான் கீதையில் கூறியது : " ஆர்வத்துடன் எப்போதும் வேலை செய். பகைவர்களை நாசம் செய். உறவென்று பாராதே .சண்டையிடுவது சத்திரிய தர்மம். உலகை அனுபவி, உன் மக்களுக்கு சுகத்தை அளிப்பது . உன்கடமை." என்றார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நேர்மாறானதாகும். மேலை நாட்டினர் யேசுவின் போதனைப்படி நடக்கவில்லை. வீ ரியம் மிக்க செயல் வீ ரர்களாகப் புறப்பட்டனர். பல் வேறு நாடுகளிலிருந்தும் போகப் பொருள்களைக் கொண்டு வந்து குவித்து சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். நாமோ ஒரு மூலையைத் தேடி, அங்கே அமர்ந்தபடி இரவு பகலாக மேலுலகைச் சிந்தித்துக் கொண்டு , வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் போல் உள்ளது, என்று பாடிக்கொணடு இருக்கிறோம். கீதையின் போதனையை அவர்கள் கேட்டார்கள். யேசுபிரான் விரும்பியதை நாம் ஏற்கின்றோம். ஏன் இப்படி? எதனால் இந்த வேறுபாடு? மேலை நாட்டைப் பொறுத்தவரை மனிதன் என்பவன் உடம்பு. அவனுக்கு ஆன்மா உள்ளது. நமக்கோ மனிதன் என்பவன் ஆன்மா அவனுக்கு உடம்பு உள்ளது. இங்குதான் பெரிய வித்தியாசம் ! ! உடலுக்குத் தேவை போகம் ! உள்ளத்துக்குத் தேவை யோகம் ! !
Thursday, May 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment