Monday, May 18, 2009

ஒப்பீடு எதற்கு?

யாரையும் எப்போதும் உன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே. அப்படி ஒப்பிடுவதால் அவர்கள் எல்லோரும் உன்னைவிடத் தகுதிகளில் திறமைகளில் மேலானவர்கள் என்று நினைக்கிறாய். உன் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. வாழ்க்கையை இது பெரிதும் பாதிக்கும். வாழ்க்கையில் சிறு விஷயங்களில் முடிவு எடுக்கக்கூட நீ தயங்குகிறாய். எங்கே தவறான முடிவு எடுத்து விடுவோமோ என்று நீ பயப்படுகிறாய். இப்படி ஒவ்வோர் அடிக்கும் பயந்தால் மனதில் துணிவு வரும் வரை நீ தோல்வியைதான் சந்திக்க வேண்டி வரும். தாழ்வு மனப்பான்மை இருந்தால் உனது திறமைகள், ஆர்வம், உழைப்பு, தன்னபிக்கை, உந்துதல், ஆகிய வாழ்க்கையின் வெற்றிக்கான அத்தனை சக்திகளையும் உன் ஆழ்மனதிலிருந்து அது அகற்றிவிடும். பேரொளியும் பேரன்பாலும் நிரம்பி வழியும் இயல்பான உன் ஆன்மாவின் சக்தியை குருட்டுத் தனமான ஒப்பீடுகளினால் இருட்டுக்குத் தள்ளி வீணாக்கி விடாதே.! குறையில்லாதவர் யாரும் இல்லை. உன்னிடம் உள்ளதை மட்டும் பூதாகாரமாக்குவது ஏன்? துணிவுடன் முடிவெடு! துரிதமாகச் செயல்படு.! அணிவகுத்து நலம் வரும்! அதற்கேற்ப வாழ்ந்திடு ! 1

No comments: