பஞ்சடைந்த கண்களும், ஒட்டி உலர்ந்த முகமும் கொண்ட பட்ட மரங்களைப் போல பெண்கள் காட்சி அளிக்கிறார்கள். எங்கும் TV கண்ணில் படவில்லை. பரட்டைத்தலையுடன் குழந்தைகள் புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்குள்ள கடைகள் மிக மிக சிறிய குச்சுகள்; வாசனைசோப்புகள், பற்பசைகள், பேட்டரிசெல்கள், போன்ற எதுவுமே அந்த கடைகளில் இல்லை. அவைகள் இங்கு தேவையாகவே இல்லை போலும். அப்போது, தமிழ்நாட்டு கிராமங்களில் சீருடை அணிந்த சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் காட்சிகள் என் அக கண்முன் தோன்றின.
இமாலயப் பிரதேசத்தின் வறுமை, வளர்ச்சியின்மையைப் பற்றிநான்
எதையும் மிகையாக சொல்லிவிடவில்லை.
சமவெளியைத் தாண்டியதும், சிம்லாவை நோக்கி மலைச்சுற்று ஆரம்பமாயிற்று. சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்த அழகிய நகர் சிம்லா. ஊட்டியைப் போன்று பன்மடங்கு கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. சாலை ஓரங்களில் திபெத்திய பெண்கள், கடை விரித்து, சுவெட்டர்கள் பின்னியபடி, தொப்பி, காலுறை, போன்றவைகளை கூவி விற்றுக்கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment