Thursday, May 21, 2009

ஒரு யோகியின் சுயசரிதை

சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்னர் திரு.K.L.P.குப்புசாமி அவர்கள சென்னைக்க வந்திருந்தபோது, எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது 'பரமஹம்ஸ யோகானந்தர்' நிறுவிய Yogoda Satsanga Society of India\ Self Realization Fellowship ல் இணைந்து, பல ஊர்களுக்கும் சென்று கிரியா யோகம் பயிற்சி அளிப்பதாகவும் கூறினார்.

' ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகம் வாங்கி படிக்கும்படியும் சொன்னார். நானும், பிறகு அதை மறந்து விட்டேன்.

பின் திடிரென்று இரண்டு நாட்களுக்கு முன் இந்த புத்தகத்தை கூரியரில் அனுப்பியிருந்தார். அவரது அன்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒரே மூச்சில் படித்துவிடமுடியாது என்றாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக பல அத்தியாயங்களை படித்து உள் வாங்கிக்கொண்டேன்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு இருப்பதால் அவருடனே வாழ்ந்து நாமும் வளர்வதாக உணர முடிகின்றது.

மஹா அவதார் பாபாஜி பற்றி முதன்முதலில் எழுத்து வடிவில் இவர் தான் முதலில் வெளிக் கொணர்ந்தவர் என்கின்றனர். பாபாஜி, லாஹிரி மஹாஸயர், குரு யுக்தேஸ்வரர் மற்றும் பல சாதுக்களையும் சன்னியாசிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களது வாழ்வின் அற்புதங்கள் நம்மை திகைப்பின் எல்லைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வாழ்வின் நிலை, இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை, இந்த வாழ்வின் அர்த்தம் என்ன, எதற்காக நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்ற ஆதிகால கேள்விகளுக்கு எல்லாம் யோகானந்தர் எளிமையாக கூறும் பதில்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

ரஜினி அனைவர்க்கும் படிக்க சிபாரிசு செய்யும் இரண்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று The Himalayan Masters.

மேலும் இந்நூலைப் பற்றிய எழுத என்னால் இயலாது.

நீங்களே படித்துப் பாருங்களேன். *****

No comments: