Sunday, May 24, 2009

இமாசல பிரதேசத்திற்கு ஒரு பயணம்

மே ஐந்தாம் தேதி, காலை டெல்லி நிஜாமுதின் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். திரு.SPAKV. வைத்தீஸ்வரன், எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார். பதினைந்து நிமிடங்களுக்குள், அவரது இல்லத்தை அடைந்தோம். அன்று முழுவதும் அவரது வீட்டில் இளைப்பாறி விட்டு, இரவு பஸ்ஸில் இமாசல பிரதேச பயணத்தை தொடர்ந்தோம்.
  • மின்சார வெளிச்சத்தில் இடமும் வலமுமாக, பெரியதும் சிறியதுமாக, தொழிற்சாலைகளை நெடுக பார்த்துக் கொண்டே வந்தோம். காலை ஐந்து மணி அளவில் 'பத்தி' யில் எங்கள் பேருந்து நின்றது. அங்கிருந்து எங்களை அழைத்து செல்ல மகன் ராஜேஷ் வந்திருந்தார்.
  • 'சோலான்' மாவட்டத்திலுள்ள 'கரோனா' என்ற இடத்தில்தான் தொழிற்சாலை இருந்த்து. எங்கள் பயணத்திலேயே ஆக மிக மோசமான சாலையைக்கடந்தோம். தொழிற்சாலை கட்ட்டத்தின் இரண்டாவது தளத்திலேயே தங்கும் விடுதியும் அமைந்திருந்த்து. அயர்ச்சி மிகுதியினால் படுத்தவுடன் உறங்கிவிட்டோம்.

மறுநாள் காலையில், சூரியனின் கதிர்கள் சுள்ளென்று உறைத்த்து. ஜன்னலை திறந்த்தும் சில்லென்று காற்று வீசியது. ஆஹா! என்ன அற்புதமான காட்சி! எந்த பக்கம் திரும்பினாலும் மலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நான்கு திசைகளிலும் மலை. அண்ணந்து பார்த்தாலும் மலையைத் தவிர்த்து விட்டு வானத்தை தனியாக பார்க்க முடியாது. கடுமையான கோடைகாலமாக இருந்தமையால் மலைகள் பல இடங்களிலும் தலை நரைத்து காணப்பட்டது.

1 comment:

Kumaresan said...

வட மாநிலங்களில் ஒன்றான ஹிமாச்சல பிரதேசத்தை பற்றி அறிந்து கொள்ள நல்ல தொடர். பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் !