- இமாசல பிரதேசத்திற்கு, எங்களது தொழிற்சாலை துவக்கத்திற்காக பயணத்தை துவங்கினோம். ஒருவாரம் முன்னதாகத்தான் திட்டமிடப்பட்டது. மெல்ல மெல்ல சூடுபிடித்து, நாட்களை எண்ணி,நிமிடங்களை எண்ணி, இதோ அந்த நாளும் வந்த்து. சிறிய பயணமாக இருந்தாலும் கூட, பயணம் தொடங்குவது என்பது என் வாழ்க்கையின் மிக உற்சாகமான விஷயங்களில் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. சின்ன வயதில் ஒரு சினிமாவிற்கு போவதென்றால் கூட என் மனம் பரபரக்கும். பலசமயம் பயணத்தைவிட பயணத்தின் தொடக்கமே முக்கியம் எனக்கூடத்தோன்றும்.இப்படியாக மே மூன்றாம் தேதி இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் நானும் என் கணவரும் டெல்லி நோக்கி கிளம்பினோம்
- இப்போது இமாசலபிரதேசம் பற்றி சிறு விளக்கம். இமாசலபிரதேசம் இமயமலையில் அமைந்துள்ளதால், இம்மாநிலம் மலையும், மலைசார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், ஆகியவை இமாலய பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இம்மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு,மனாலி,தர்மசாலா, ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். இதன் கிழக்கில் திபெத் உள்ளது. தலாய் லாமாவும், மற்ற திபெத்திய அகதிகளும் தற்சமயம் தர்மசாலாவில் வசிக்கின்றனர்.. சுக்கர், சட்லஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும்.{ இன்னும் வரும் }
Monday, May 18, 2009
இமாசலபிரதேசத்திற்கு ஒரு பயணம்
Posted by
pachanayaki palaniappan
at
5:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment