Monday, May 18, 2009

பிரச்சனை!

தீர்வு காணமுடியாத பிரச்சனை ஏதுமில்லை.அப்படி இருந்தால் அது பிரச்சனையாக இராது. ஒரு காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் பறக்கும். அது காற்றுடன் பறப்பதில்லை. எதிர்ப்புக்குப் பயந்து நல்ல செயல்களைச் செய்யாமல் விடுவதும் செய்யத் துவங்கி நடுவில் நிறுத்தி விடுவதும்,பெரும்பாலானவர்களின் இயல்பாக உள்ளது.தடைகளைத் தகர்த்து விடா முயற்சியுடன் வெற்றி பெறுபவனே வாழ்க்கையில் முன்னேறுகிறான். நம் பார்வையும் கண்ணோட்டமும்தான் முக்கியம்.சரியான அணுகுமுறை தேவை.இது மற்றவர் சொல்லி நமக்கு வ்ரவேண்டு மென்பதில்லை. பதட்டத்தை விடவேண்டும். பொறுமையும் நிதானமும் அவசியத் தேவையாகும். பிரச்சனையை எப்போதும் தள்ளிநின்று பார்க்கவேண்டும்.சரியாகச் செய்வோம்.விரைவாகத் தீர்ப்போம். சில நேரங்களில் போரட்டங்களும் பிரச்சனைகளும் நமக்குத் தேவையானவைதான். நாம் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றப் பட்டால் அது நம்மை வலிமையற்றவர்களாக ஆக்கி விடும் மனவலிமை மட்டுமல்ல ,உடல் வலிமையையும் அது பாதிக்கும். பிரச்சனை இல்லா வாழ்க்கையும் பிடியில்லாத குடையும் ஒன்று. எழுந்து நில்! எதிர்த்துப் போராடு! குடையும் இருக்கும் பிடியும் கிடைக்கும்.

No comments: