Tuesday, November 10, 2009

திரும்பிப் பார்க்கிறேன்

R.குழந்தைவேலு எழுதும்
ஏழாவது பகுதி
கொச்சியில் 31\2 வருஷம் இருந்த்தில் சம்பளமும் 3 ஆயிரம் கேட்டு வாங்கிவந்தேன். கல்யாணம் ஆனபின் தனியாக இருக்க முடிவு செய்த்தால் , கோவைவந்து பாத்திரக்கடையில் இருந்து வந்தேன். Raw material market உம் தகடு ஏசியன் விலையும் நன்றாக இருந்த்தால் பம்பாயிலிருந்து குலாமலி பட்டாஸும் ஐசிசி ஷீட்டும் வாங்கினோம். அந்த வருஷம் 48\49 ல் ரூ.10 ஆயிரம் லாபம் கிடைத்த்து. அதற்கு சரியான படி encourage இல்லாத்தால், ஏதாவது ஒரு port ற்கு சென்று வியாபாரம் செய்யலாம் என்று நானும் தம்பி RM உம் முடிவுசெய்தோம். அதற்காக நானும் KN&KA அவிநாசியப்பனுடன் பூனா சென்றேன். அவ்விடம் உள்ள factory ற்கு பழைய பித்தளை வாங்கி போடலாம் என்று தீர்மானம் செய்து, அங்குள்ள industries contact செய்தபோது, சரக்கு அனுப்பி நேரில் டெலிவரி கொடுங்கள், பணம் தருவதாக சொன்னார்கள். யாரும் என்னை நம்பி சரக்கு அனுப்பாத்தால், அதுவும் செய்யமுடியவில்லை.பின் பம்பாயில் republic day பார்த்துவிட்டு ஊர்{கோவை} திரும்பினேன்.
  • ஆனால் நான் கோவை நேராக வராமல், பம்பாயிலிருந்து புறப்பட்டு வாடி வழியாக செகந்திராபாத் வந்தேன்.அவ்விடம் நம்ம ஊர் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்த சித்தார்பெட் சென்று 4 நாட்கள் தங்கி இருந்தேன்.வெளியில் உள்ள வியாபாரிகளிடம் 20*30 ஆயிரம் வரை பித்தளை சொம்பிற்கு ஆர்டர் வாங்கி நேராக கோவை வந்தேன் அனுப்பர்பாளையம் MAK சொக்கலிங்கம் செட்டியார் நல்ல பழக்கம் உள்ளவர். ஆனதால் ஆர்டர்களை மேற்படியாரிடம் கொடுத்து bank pass போட்டு அனுப்பினேன்.எனக்கு அதில் போய்வந்த செலவு கிடைத்த்து.

No comments: