, மார்ச் 17 ஆம் நாள் காலமான எங்கள் அத்தை VCR கமலம்மாளைப் பற்றிய என்னுடைய நினைவில் நின்ற்வைகளைப் பற்றி எழுதுகிறேன். எப்போதும் சிரித்த முகம் , அதிகம் பேசாதவர் , கடமையே கண்ணாயிருப்பார், இவரது வாழ்க்கையில் நேர்ந்த துன்பங்களை எதிர்த்து நின்று போராடிய இவரது துணிச்சல், குரல் ஆண்களைப் போல் கம்பீரமாக் ஒலிக்கும்; வெட்டு ஒன்று துண்டு இரண்டு ஆக பேச்சு இருக்கும்; யர்ர் வீட்டுக்கு போனாலும் , தன் வீடுபோல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார். படிப்பு அறிவு இல்லையென்றாலும் பொதுகாரியங்கள் மிகவும் ஈடுபாடுடன் செய்வார்.எனது தந்தையர்ர் இவரை " கமலு.....கமலு " என்று அன்பொழுக கூப்பிடும் குரல் இன்னும் என் காதுகளீல் ரீங்காரம் செய்துகொண்டு இருக்கிற்து.எப்போதும், அத்தை வீட்டிற்க்கு வந்துவிட்டால் , அருகில் உட்கார்வைத்து. அவருடன் தான் சாப்பிடுவார். என் தந்தை அடிக்கடி சொல்லும் வர்ர்த்தை "சுததாத ஊரில்லை கொததாத் மரமில்லை" அதற்கு பொருள் எனக்கு இன்னும் விளங்கவில்லை.இவர் வழியை பின்பற்றீ நாமும் செல்லவேண்டும் என்ற் உண்ர்வை ஏற்படுத்தியவர். நமது நம்மவர்கள் சமூகத்தில் இந்த அத்தையின் பெயர் , எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும்.
Friday, March 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment