Saturday, April 5, 2008

வணக்கம், திருமூலர் மந்திரங்கள்-6 16 900 இருக்கின்ற மந்திரம் ஈசா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எட்டிறாம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவந்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வணான் தானே நம் எர்ணாகுளம் மக்கள் விற்றூணியார் கோவிலில் செய்த அபிஷேகத்தில் நானும் பங்கு கொண்டேன். அப்பொழுது ஏறக்குறைய எல்லா சன்னிதானங்களும் அஷ்டபந்தனம் செய்யப்பட்டு இருந்தன. அபிஷேக நீர் இப்பொழுது பிரதிஷ்டத்தில் விழுகிறது. இது கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டுமென்பதைக் குறிக்கிறது. இதன்மூலம் உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். தங்களிடமிருந்து வரும் பதில்களைக் கொண்டு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவிலை பராமரிக்க சற்று கவனம் தேவை. அதற்கு சில யோசனைகளை கீழே கொடுத்துள்ளேன். 1. அனைத்து சன்னிதானங்களும் சுத்தமாகவும்,தரைகளை சுத்தப்படுத்தவும்,விளக்கு மற்றும் பித்தளை சாமான்கள், வாசல் நிலைகளின் பித்தளை வேலைகள், பிரபாவல்யம் இன்ன பிற நடக்க வேண்டும். 2. ஒவ்வொரு சன்னிதானமும் ஒரு ஆள்/குடும்பம்/கிராமம்/நகரம்/ ஏற்கப்பட வேண்டும். 3. நமக்கு மூன்று முக்கிய சன்னிதானங்களும், மூன்று சிறிய சன்னிதானங்களும் உள்ளன. ( மூன்று + ஒன்று). 4. பிற செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.500/-ம், வருடந்தோறும் ரூ.6000/- தேவைப்படலாம். 5. இதுபோக விளக்குப் போட தினந்தோறும் ரூ.5/- ம்,வருடத்திற்கு ரூ.1825/- (365 நாள்). இது கோவிலில் நிறைய விளக்கு எரிய கண்டிப்பாக உதவும். 6. வலைதளம் வழியாக நம் மக்களுக்கு அர்ச்சனை,அபிஷேகம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யலாம்.பிரசாதம் அனுப்பவும் ஏற்பாடு செய்யலாம். 7. ஒவ்வொரு நிகழ்விற்கும் காணிக்கை (ரூ.1.25) விற்றூணியார் கோவிலுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும். 8. நம் பிறந்த நாள், மற்றும் பிற விஷேச நாளன்று விற்றூணியாருக்கு சிறிய தொகை எடுத்து வைத்து நம் முன்னோர்களை பின்பற்றலாம். 9. ஒரு சதுர அடி முதல் பல அடிகள் நந்தவனத்திற்களித்து செடிகள் வைக்கலாம். இதற்கான மதிப்பீடு பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்து உங்கள் அனைவரது யோசனைகளை எதிர்பார்க்கிறேன். இப்படிக்கு, க. ராமிர்தம்(மணி) த/பெ, அ.க.கதிரேசன் செட்டியார்,ஞானாம்பாள். இந்த மொழி பெயர்ப்பில் ஏதும் பிழை இருப்பின் பொருத்தருள்க.

No comments: