Wednesday, April 16, 2008

நாடறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் ஒரு கேடா? இந்தப் பழமொழியின் பொருளை அறிவோம். அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்துக்கு அடையாள முத்திரையோ விளக்கமோ அவசியம் இல்லை. 7. சோறு முத்துனா சோமாரம்; அரிசி முத்துனா அமாவாசை இந்தப் பழமொழியின் பொருள் தெரியவில்லை. ஆனால் யூகிக்கலாம். முத்துதல் என்றால், மிகுதி ஆகுதல் தகுதி குறைதல் (காய் முத்தினால் அதன் செம்மை குறைந்துவிட்டது என்று பொருள் கொள்வது போல. சாப்பாடு அதிகம் ஆனால், சோமார விரதம் (திங்கள் இரவு பலகாரம் மாத்திரம் உண்பது, இரவு சாப்பாடு தவிர்த்தல் ) ; அரிசி அதிகமாக இருந்தால், வயனமான சாப்பாடு. அமாவாசை என்றால் பூரணமான் சாப்பாடு. (அமாவாசைச் சோறு அன்றாடம் அகப்படுமா என்கிற பழமொழியில் உள்ளது போல). இந்தப் பழமொழியில் உள்ள நயம் - இரு பொருள்கள் மிகுதி ஆகையில் உண்டாகும் நேர் எதிர்மறையான விளைவுகள் பேசப்படுதல். முத்துனா என்கிற ஒரு சொல்லே பழமொழியின் இரு பகுதிகளிலும் வருதல் சிறப்பாக உள்ளது - சோற்றின் அடிப்படையான அரிசியும், அதன் பயன்பாட்டுப் பொருளான சோறும் ஒப்பிடபடுதலும் ஒரு நயம். மற்ற பழமொழிகளை இன்னொரு நாள் பார்ப்போம். .

No comments: