Monday, September 29, 2008

திரு.ATN. தம்மணசெட்டியார் பிறந்தநாள் செய்தி

83 வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.ATN. தம்மணசெட்டியார் "நம்மவர்களை" வாழ்த்தி அளித்த பிறந்த நாள் செய்தி எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்

  • .உன்னுடையதை எதை இழந்தாய் ? எதற்காக அழுகிறாய்?
  • எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு?
  • எதை நீ படைத்திருந்தாய் ? அது வீணாவதற்கு?
  • எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
  • எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது
  • .எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இந்த மாற்றம் உலகநியதியாகும்.!
தன்னை அறியும் தியானம் { அஜப ஜப தியானம்} விநாயகர் அகவலில் ஔவையார் ' தன்னை அறியும் தியானம்" { அஜப ஜபதியானம்} பற்றி மிகச் சிறப்பாக கூறி இருக்கிறார். அஜப ஜப தியானம் என்பது , நம் உள் மனம் அறிதல் ஆகும்.அதற்கு நாம் கடந்தகால நிகழ்வுகளை மறந்து , எதிர்காலம் பற்றி எண்ணாமல் , நிகழ்காலத்தைப்பற்றியே சிந்திப்பது ஆகும். இத்தியானத்தினால் நாம் நினைத்தவற்றை நாம் விரும்பியவாறு அடைவதேயாகும். இது ஒரு மிக அற்புதமான உயர்ந்த தியானம் ஆகும். இத்தியானத்தைப்பற்றிமாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறியிருக்கிறார் . மாணிக்கவாசகர் குறிப்பிடும் " உத்திரகோசமங்கை" என்னும் க்ஷேத்திரம்திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளது. இத்தலத்தில் மரகதலிங்கச்சிலை உள்ளது. "உத்திரம் என்றால் வடக்கு. கோசம் என்றால் சகஸ்ர ஜல சக்கரம். சிரசிலே உள்ள இறைவனின் இருப்பிடம்". இதை அடைவதற்கு மங்கை என்கிற மனோண்மணி சதாசிவத்துடன் ஒளிமயமாக பிரகாசித்துக்கொண்டு இருக்கும் காக்ஷியாகும். அதை தரிசனம் செய்வதற்கு, வலது கண்ணின் ஒளியையும், இடது கண்ணின் ஒளியையும் ,ஒன்று சேர்த்து வடகிழக்கில் { ஈசானிய திசையில் } பார்க்கவேண்டும். அது தான் இறைவனின் இருப்பிடம் ஆகும். இதைப் பற்றி திருமூலரும் திருமந்திரத்தில் கூறியுள்ளார். 'மனிதன் தன்னை அறிந்தால் மனிதன் தான .{ தான்தான்} இறைவன் " என்றுதிருமூலர் சொல்லியிருக்கிறார். அதனால் ஒவ்வொரு மனிதன் உள்ளும்இறைவன் ஜீவாத்மாவாக இருக்கிறான். அதை அறிவதே " அஜப ஜப தியானம்" ஆகும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். 9840124541

1 comment:

Kumaresan said...

மிக பயனுள்ள கட்டுரை. அன்னாரது பிறந்த நாளில் அவரது ஆசிகள் வேண்டுகிறோம்