புளிகுத்தி உப்பேரி
உணவு வகை : பாலக்காடு குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 2 பெரியது
வெண்டைக்காய் - 1/4 கிலோ
உருளை - 2 பெரியது
சேப்பங்கிழங்கு - 2 பெரியது
வாழைக்காய் - 1
புளி கரைசல் - 1 கப்
கருவேப்பிள்ளை, மஞ்சள்தூள், உப்பு, கடுகு - தேவையான அளவு
எண்ணை - 2 தேக்கரண்டி
குழம்பு பொடி தயாரிக்க: எண்ணை விடாமல் சட்டியில் வறுத்து அரைத்து கொள்ளவும்
அரிசி - 1 கைப்பிடி
வெந்தயம் - 15 எண்ணிக்கை
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - 2 சிட்டிகை
- மேலே சொன்ன காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கவும்
- குக்கரில் புளி கரைசல் விட்டு வேக வைக்கவும் (குழைய வேண்டாம்)
- வானலியில் எண்ணை விட்டு சூடானவுடன் கடுகு பொரிக்கவும்
- கருவேப்பிள்ளை & வேக வைத்த காய்களை சேர்க்கவும். மீதமுள்ள புளி கரைசலை ஊற்றவும்
- உப்பு, குழம்பு பொடி, மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- குழம்பு தயார் !
அளவு: 4 பேர்
1 comment:
palakadu uappari very super
Post a Comment