தேவையான பொருட்கள்
* ஜவ்வரிசி - 250 கிராம்
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 5
* சீரகம், கடுகு, கறிவேப்பிலை, எண்ணை, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
* சமைத்த பின் அலங்கரிக்க பச்சை கொத்துமல்லி & எலுமிச்சை சாறு - தேவையான அளவு
செய்முறை:
* ஜவ்வரிசியை 30 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வைக்கவும்
* தண்ணிரை வடித்த பின் 8 மணி நேரங்கள் பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்
8 மணி நேரம் கழிந்த பின்...
* வாணலியில் எண்ணை, கடுகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளி, நறுக்கிய மிளகாய் இட்டு வதக்கவும்.
* வடித்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
* வேண்டிய அளவு உப்பு, மஞ்சள் போட்டு 5 நிமிடங்கள் பிரட்டவும்
* சமைத்த பிறகு கொத்துமல்லி & 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்
ஜவ்வரிசி உப்புமா தயார் !!!
குறிப்பு:
* தண்ணிரை 30 நிமிடம் ஊற வைக்க மட்டும் பயன் படுத்தவும். உப்புமா செய்யும் பொழுது தெளிக்கவோ/ஊற்றவோ தேவையில்லை
* பிற வகை: தக்காளிக்கு பதில் தேங்காய் அல்லது (நொய் போல்) பொடித்த வேர்கடலை உபயோகிக்கலாம்
உண்ண: 2 நபர்கள்
நேரம்: 30 நிமிடங்கள் + 8 மணி நேரம் + 15 நிமிடங்கள்
Sunday, September 28, 2008
ஜவ்வரிசி உப்புமா
Posted by
Kumaresan
at
12:00 AM
Labels: ஜவ்வரிசி உப்புமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment