Tuesday, September 2, 2008

அப்பனே ! அப்பனே ! பிள்ளையாரபபனே ! உன்னருள் பெற என்ன வழி அப்ப்னே !

விநாயகரின் அருள் பெற வழிகள் -மனதால் நினைத்தாலே ஓடி வந்து அருளும் முதன்மைக் கடவுள் விநாயகர். தன்னை வணங்குபவர்களுக்கு மங்களத்தையும் மன்த்தூய்மையையும் உண்டு பண்ணும் விநாயகரின் அருள் பெறும் வழிகள் சிலவற்றை இப்போது காண்போம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள். அந்த தினங்களில் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது. சுக்ல சதுர்த்தசியன்று அருகம் புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வெற்றி என்பது உறுதி. அத்துடன், வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வழிபட்டோமானால் நல்லருள் பெறுவது நிச்சயம் . இவ்வாறு பல்வேறு விதங்களில் செயல்பட்டால் விநாயகரின் அருளைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை மனதில் கொண்டு விநாயகரை வழிபட்டு வந்தால் சுபிட்சம் எப்போதும் கிடைக்கும்.

No comments: