Thursday, October 16, 2008

நம்மவர்களிடையே இன்னும் புழங்கிவரும் பழமொழிகள்

1. அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு.

  • 2. பழைய குருடி கதவத் தெறடின்னு. தவறாக நடந்து மாற்றி நன்றாக செய்துவிட்டு, மீண்டும் தவறாக்கும் போது "பழைய குருடி கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"என்று சொல்வார்கள்.
  • 3. மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா?
  • 4. நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத.
  • 5. நாய்க்கு பேரு முத்துமாலை. பொருத்தமில்லாத ஒன்று என்றால் எள்ளலாக "நாய்க்கு பேரு முத்துமாலையாமா" என்பார்கள்.
  • 6. செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி
  • 7. ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும் தோத்துட்டுப் போக வேண்டியதுதான். அறிவுரை கூட உருப்பட வாய்ப்பிருப்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
  • 8. ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது. கோணை - கோணல்
  • 9. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு இட்டாரிக்குத்தான் போகும்.
  • 10. கெழவன் கோமணம் கட்டுன மாதிரி
  • 11. அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும். பெக்கோணும் - குழந்தை பெறுதல்.
  • 12. பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம்.
  • 13. பொழக்கிற புள்ளைய பேல உட்டு பார்த்தா தெரியாதா?
  • 14. எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம்.
  • 15. மொளச்சு மூணு எலை உடுல. வயதில் சின்னவர்கள் ஏதேனும் பிடிக்காத காரியத்தைச் செய்யும் போது உபயோகிப்பது.
  • 16. எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா
  • 17. நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான். நடு ஆற்றுக்குச் சென்றாலும் நாய் 'சலக் சலக்' என்று நக்கித்தான் குடிக்கும். என்னதான் புகழ், பணம் கிடைத்தாலும் அவனவன் அவனவன் தகுதிக்கு ஏற்பதான் நடப்பார்கள்.
  • 18. புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம். வட்டல் - தட்டம்.

1 comment:

Kumaresan said...

ஆஹா கிளம்பீட்டாங்கய ...கிளம்பிடங்க ;-)