skip to main |
skip to sidebar
-
அமுதசுரபி பதிப்பகம், சமீபத்தில் செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் புத்தகத்தை மறுபதிப்பு கொண்டு வந்திருக்கிறது. சென்ற வாரம் அதை ஒரு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் படித்து முடித்தேன்.
மகாக்கயான்
- மகாகவியான பாரதியின் மனைவி, தம் கணவர் பற்றி எழுதிய புத்தகம் என்னும் போது, எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. புத்தகத்தில் சில அபூர்மான இடங்களும், பல சாதாரண விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
- பெரும்பாலும் பாரதி பற்றி சொல்லப்படும்போதெல்லாம், அவர் வறுமையில் வாடினார் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிவந்திருக்கிறார்கள். இந்தத் தொகுதியில் அதற்கான தடயங்கள் வெகு குறைவாகவே இருக்கின்றது. புதுச்சேரி வாழ்வில் மட்டும் ஓரிடத்தில் தமது இல்லாமையைச் சொல்கிறார் செல்லம்மாள். வேறொரு இடத்தில், அவர் தாம் அணியும் உடையின் கிழிசல்களை மறைக்கவே கோட் அணிந்தார் என்பதை மறுத்து, அவர் மிகவும் அழகாகத் தம்மைப் பேணிக்கொள்வதில் ஆர்வமுடையவர் என்று கூறுகிறார்.
- மற்றொரு சித்திரமும் காணக் கிடைக்கிறது. பாரதியாரை யாரும் கைவிட்டுவிடவில்லை. செல்லம்மாளும், அவரது சகோதரர்கள் மற்றும் பாரதியின் நண்பர்கள் என்று பலர் பாரதியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கித்தான் இருக்கிறார்கள். தம் கணவர் பெரிய கவி என்பதில் செல்லம்மாளுக்கு பெருமிதம் இருக்கவே செய்கிறது. அது பின்னால் ஏற்பட்ட ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. அவரோடு சேர்ந்து குடும்பம் நடத்தி வாழ்ந்த காலத்திலேயே அவரது மேன்மையை உணர்ந்தே இருந்திருக்கிறார் செல்லம்மாள். அவரது மகள்களுக்கு அப்பா மேல் மரியாதையும் கெளரவமும் இருந்திருக்கிறது.
- இன்று பாரதி பற்றி புனைப்பட்டிருக்கிற பல சித்திரங்கள், இந்தப் புத்தகத்தினால் உடைந்தது.
பாரதி பற்றி, மனைவியாக செல்லம்மாள் தெரிந்துகொண்டிருக்கக்கூடிய பல அணுக்கத் தகவல்கள் ஏதும் அதிகம் இந்த நூலில் இல்லை. எழுதவேண்டும் என்று நினைத்ததை மட்டும் எழுதியிருக்கிறார்.
1 comment:
தங்கள் குறிப்பு மூலம் புத்தகத்தை படித்த உணர்வு பெற்றோம். நன்றி
Post a Comment