Tuesday, October 21, 2008

திரு. R.குழந்தவேல் எழுதும் திரும்பிபார்க்கிறேன்"

கோவை.ஜில்லா , பல்லடம் தாலுக்கா, வேலம்பாளையம் கிராமத்தில் , மேற்கு வளவு கெங்காதரம்செட்டியார்வகை குழந்தைவேல் செட்டியாரின் குடும்பவகையினரின் குறிப்பு . குழந்தவேல் செட்டியாருக்கு 3 மக்கள் ஆவர். 1. குருந்தாசலம் செட்டியார் 2. ராமசாமி செட்டியார் 3. காளியப்ப செட்டியார். 2 பெண்கள். 1.வள்ளியம்மாள் 2. சிவகாமி அம்மாள்.

குழந்தைவேல் செட்டியாரின் இரண்டாவது மகன் ராமசாமிசெட்டியாருக்கு முதல் மனைவிக்கு ஆண் சந்ததி இல்லாததால் இரண்டாவது கல்யாணம் செய்து , 2 ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்த தாரத்திற்கு ஒரு பெண்ணும் இருந்தது.. இரண்டாவது மனைவிக்கு பிறந்த 1.குழந்தைவேல் 2.முத்துகுமாரனும் இருந்தனர். இவர்கள் முறையே 1926 & 1928 ஆம் வருஷம் பிறந்தனர்.

  • மேற்படி ராமசாமிசெட்டியாரும் சின்ன வயதிலிருந்தே பித்தளை வியாபாரம் ஊரில் செய்து வந்தார் சாப்பாட்டிற்கு 3 பொதி நெல்லும்,(வருஷம்) அவர்கள் முன்னோர்கள் வஐத்திருந்த் பங்கும் வரும்.மேற்கொண்டு சிலவிற்கும் ஊரில் வியாபாரம் செய்துவந்தார் .அதற்கு முன்பாக் தனது தமையனார் குருந்தாசலம் செட்டியார் மகனுடன் சேர்ந்து கும்கோணத்தில் பாத்திரகடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.மேலும் தனது தமையனார் மக்களையும் கும்பகோணத்தில் இருந்து , வியாபாரங்கள் கற்று VK குருந்தாசலம் செட்டியார் & சன்ஸ் என்று வியாபாரம் செய்து வந்தார்கள் {தொடரும்}

No comments: