இந்த ஆண்டு கந்த சஷ்டியின் போது வெறும் பாடல்கள் மட்டும் தானா? ஒவ்வொரு படைவீட்டிலும் மறைமுகமான சில ரகசியங்களைக் கூடவே பார்க்கலாமா? தீபாவளிப் பட்டாசு வெடித்த கையோடு, இப்படி எல்லாம் ஒரு ரகசியமா? தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு ?
- ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி-அமாவாசை முடிந்து முதல் நாள் அன்று துவங்குவது கந்த சஷ்டி! மொத்தம் ஆறு நாட்கள்!* ஆறு படை வீடுகளில் படையுடன் தங்குகிறான் முருகன்!* பின்னர் ஆறு நாட்கள் கடும் போர்!* இறுதி நாள் சூரசங்காரம்!தீமையை அழித்து நல்லன காத்தல்! வெறும் இவ்வளவு தானா இந்த சஷ்டி?ஆற்றுப்படை கேள்விப்பட்டு இருப்பீங்க! நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் கேள்விப்பட்டு இருப்பீங்க!
- ஆறு=வழி! வழி காட்டி உதவுதலை ஆற்றுப்படை-ன்னு சொல்லுவது மரபு. வறுமையில் வாடும் புலவர்களுக்கு, ஏற்கனவே பரிசில் பெற்ற புலவர்கள், நல்ல வழி சொல்வது போல் இருக்கும் ஆற்றுப்படைப் பாடல்களின் அமைப்பு.இந்த ஊர் மன்னன் நல்ல வள்ளல், அந்த ஊர் மன்னன் கலைகளின் ரசிகன் என்றெல்லாம் சொல்லி வழிகாட்டி உதவுதல் ஆற்றுப்படை
- தான் மட்டுமே நல்லா இருக்கணும் என்றெல்லாம் நினைக்காது, அடுத்தவருக்கும் செல்வம் பெறும் வழியைக் காட்டி ஒருவருக்கொருவர் உதவினார்கள்! பொருநர் ஆற்றுப்படை, சிற்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எல்லாம் சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள். சரி, முருகு-ஆற்றுப்படை எதற்கு?நக்கீரர் தமிழ் இலக்கியப் புரட்சியாளர். ஒரு நல்ல ஆன்மீகப் பதிவர் :)எல்லாரும் அரசன், வள்ளல் என்று தான் ஆற்றுப்படை நூற்களைச் செய்தார்கள். தான் மட்டும் வித்தியாசமாகச் செய்ய நினைத்தார்.அகம்-புறம் என்பது தான் அப்போதைய தமிழ் இலக்கிய முறை! இறை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வந்து போகுமே தவிர, முழு நூலும் இறையருள் பாற்பட்டதாய் இருக்காது!எல்லாரும் சினிமா, கலை, கதை, காதல், போர்-ன்னு எழுதும் போது, இவர் மட்டும் ஆன்மீகத்தை நுழைத்தால்? :)முருகு ஆற்றுப் படை என்று தைரியமாகப் பதிந்து, புதிய வழி காட்டினார் பதிவுலகிற்கு!எதுக்கு வழி காட்டணும்? = செல்வத்துக்கு வழி காட்டணும்!செல்வம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வழிகாட்டினால் போதுமா?அங்கே கஷ்டப்பட்டு, அலைந்து திரிந்து போன பின்பு, செல்வம் தர முடியாது போ-என்று அந்த மன்னன் சொல்லி விட்டால்?இல்லை...ஒப்புக்கு ஏதோ ஒரு சிறு செல்வத்தை மட்டும் அவன் அளித்து விட்டால்?
செல்வத்துள் செல்வம் அருட் செல்வம்!அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்செல்வச் செவிலியால் உண்டு - என்பது குறள்.* அருள்பவன் யார்? = யாரையும் அழிக்க நினைக்காதவன். கருணையால் ஆட்கொள்பவன்!* அழிவில்லாத செல்வம் எது? = தெய்வத்-திரு-அருள்* எந்தவொரு சூழ்நிலையிலும் தரமாட்டேன் என்று சொல்லாதவன் யார்? = வள்ளியின் வள்ளல்! அவனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிறார் நக்கீரர்! அவன் இருக்கும் ஒவ்வொரு படைவீடாகச் சொல்லி, நம்மைச் சென்று சேர்பிக்கிறார் நக்கீரர்!அட, நம்மைச் சேர்ப்பிக்க இவர் யாருங்க நடுவுல? நல்ல கேள்வி!ஆற்றுப்படையின் இலக்கணம் என்ன? ஏற்கனவே பரிசு பெற்றவன், இன்னொருவனுக்கு அந்த அரசனைக் காட்டி அருள்வது! நக்கீரர் ஏற்கனவே பரிசு பெற்றவர்! அதை நமக்குச் சொல்லி நம்மையும் அவனிடம் ஆற்றுப்படுத்துகிறார்!
- நக்கீரரும் முருகனும்கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது!ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்தவர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, அது என்ன என்ற ஆவலில், காண்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும் இப்போது ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.
- கந்த சஷ்டியின் போது, ஆறு நாட்களும், ஒவ்வொரு படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர் சோலை! அதுக்கு முன்னால் இன்றைய பாட்டு! http://in.youtube.com/watch?v=7CrSopiZxuQ

3 comments:
thanks for complying with request for moving the archives to the top
thanks for complying with request for moving the archives to the top
October 30, 2008 8:56 AM
அருமையான தொடர். பாராட்டுக்கள் பல !!!
Post a Comment