Sunday, October 5, 2008

கடப்பா

கடப்பா பயத்தம்பருப்பு 200 கிராம் பட்டை 2 சிறுதுண்டுகள் இலவங்கம் 3 பெரிய வெங்காயம் 300 கிராம் உருளைக்கிழங்கு 300 கிராம் பொட்டுக்கடலை 50 கிராம் கசகசா 20 கிராம் பச்சைமிளகாய் 10 கொத்துமல்லி சிறிது தேங்காய் அரை மூடி பூண்டு 8 பல் உப்பு பயத்தம்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கினயும் வேகவைத்து எடுத்து தோலுரித்து, உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சைமிளகாய் போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் 4 பல் பூண்டு போட்டு சிவந்ததும் பட்டை, இலவங்கம் போட்டு வெடித்தபின் அரிந்து வைத்துள்ள வெங்காயம் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். வேக வைத்துள்ள பயத்தம்பருப்புடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன், உரித்து வைத்துள்ள ஊருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல், பொட்டுக்கடலை விழுது ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். இறக்கி வைத்த சூட்டோடு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்துமல்லி தழையைத் தூவி விடவும்.

1 comment:

Kumaresan said...

உம்ம்ம் ..சமையல் குறிப்பு படிக்கும் பொழுதே எச்சில் ஊறுகிறது. என்ன வெங்காயம்/பூண்டு நெடி தான் சிறிது உதைக்கிறது :-(