Saturday, December 27, 2008

திரும்பிப் பார்க்கிறேன் R.குழந்தைவேல் தொடர்கிறார்

கோவையில் குடியேறியபோது, லைட் கிடையாது,கடையைப்பூட்டியபின் கையில் லாந்தரைப் பிடித்துக் கொண்டுதான் வீடுசெல்லவேண்டும்.லைட்டும் 1936-ல் வந்ததாக நினைவு. நானும் தம்பியும் அங்காளம்மன் கோவிலிலுள்ள School-ல் படித்துவந்தோம். அப்போது Tution ரூ5 ; அரிசி மூட்டை ரூ8,, பால் பிற மளிகைகளும் விலை மிகவும் கம்மி.30 ரூபாய் இருந்தால் வீட்டுச்செலவிற்கு போதுமானது.அதை இரண்டு மாமனும் கொடுத்துவந்தார்கள்.1936\37-ல் Veerasamy Hr Secondary School ல் நான் 5 வதும் தம்பி 3வதும் போய்ச்சேர்ந்தோம்.வியாபாரமும்,கோவை கடையில் தினமும்,30\40 ரூ க்கு நடந்தது. மேலே குறிப்பிட்டபடி கடைவாடகை,வீட்டுவாடகைபோக 3வீட்டுசெலவிற்கும் அது வரும்.1930 இருந்து 1940 வரை வியாபாரம் அதிகம் இல்லாமல் இருந்தது.பின்னர் Market ல் ஒற்றுமையில்லாமல் இருந்ததால் 1942 ல் இருந்து Union rate fix செய்தார்கள்.அதில் Price list போட்டதால், நல்ல லாபம் சேர்த்து, நன்றாக Sales செய்து வந்தார்கள். அதனால் ஒவ்வொரு கடைக்கும் 30,40 ஆயிரம் தாராளமாய் கிடைத்தது. இந்த நிலை 1944 ற்கு மேல் நீடிக்கவில்லை.

No comments: