Tuesday, December 30, 2008

புத்தாண்டு வருகிறது. தயாராகுங்கள்!!

2008-க்குப் பிரியா விடை தர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த வருடம் தந்த மறக்கமுடியாத நாட்களையும் பரவசதருணங்களையும் மனதுக்குள் அசைபோடுவது தனிசுகம் தானே?

மனதைத் தொடுகிற மல்லிகையோ, மண்ணைத்தொடுகிற மழைச்சாரலோ, எதுவாக இருந்தாலும் நம் நினைவின் ஏடுகளில் முதன்முதலாக தடம் பதிக்கிற விஷயங்களுக்கு தனி மகத்துவம் உண்டுதானே?அதே உணர்வோடுதான் 2008 வருட பிப்ரவரி மாதம் '"நம்மவர்கள்'" என்ற இணையத்தளத்தை தொடங்கினேன்

இந்த ஓராண்டுகாலமாக, எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மின்னஞ்சல் அனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நம்மவர்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றிகளும் !! சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்மைதான். அத்தருணங்களில், உங்களிடமிருந்து வந்த தொலைபேசிகள், என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தி இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை.இது 356வது பதிவு. இப்பயணம் இதுவரை சாத்தியமாகியதற்கு முழுமுதற் காரணம் நீங்கள்தான்

இறைவன் எல்லா விதத்திலும் நம்மை கருணையோடு நடத்தி வந்திருக்கிறான். பாதுகாவல் கொடுத்திருக்கிறான். அனைவரும் நோய்நொடி இல்லாமல், ஆரோக்கியமாக, உற்சாகத்தோடு, குடும்பத்தோடு, குழந்தைகளோடு, இருக்க அவனிடம் கையேந்துவோம்

.நல்லதோரு புத்தாண்டு நம்மை நோக்கி வருகிறது. அதிக பரவசத்தை தர தயாராக நிற்கிறது. அந்த ஒளி வழியில் நாம் நடந்து கொண்டாடுவோம்

No comments: