Friday, December 19, 2008

நடுவச்சேரி சிவளாபுரி அம்மனே! திரு.SA முருகநாதனுக்கு கனக்கும் செல்வம் நூறு வயது இவை தர கடவாயே!

இன்று எங்களது அன்பு சகோதர்ர் SAமுருகநாதன் 70 ஆவது வயதை அடி எடுத்து வைக்கிறார். இந்நன்னாளில், பாரதி கணபதியை நோக்கி கட்டளையிட்ட இப்பாடலை நினைவுகூர்வோம்.
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன
கேளாய் கணபதி !
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே
தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின்மவுனநிலை வந்திட நீ
செயல் வேண்டும்.
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும்
தர நீ கடவாயே !
இந்த பாடலில் இருக்கும் உரிமை பாரதியாரின் தனித்தன்மை. சொல்லடி சிவசக்தி என்று இன்னொரு பாடலில் பாடுவதைப் போல் இங்கே கடவாயே என்று கணபதிக்குக் கட்டளை இடுகிறார் அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை. உலகப் பட்டறிவின் மொத்தமான முடிவு அதுதானே? ஆகையால் நாமும் அந்தப்பொருள், கனக்கும்படி வேண்டும். அத்துடன் நூறு வயது ஆயுளும் வேண்டும் என சிவளாபுரி அம்மனை இறைஞ்சி வேண்டிக்கொள்வோம்

No comments: